Thursday, 26 July 2018

நக்ஸல் சவால் - 4


"நாம் இந்துக்கள் அல்ல. நாம் இந்த மண்ணின் பூர்விக மைந்தர்கள், எங்கிருந்தோ கைபர் கால்வாய் வழியாக வந்த ஆரியர்கள் நம் இடங்களை பிடித்து வைத்துக்கொண்டனர். அதோடு நிற்காமல் கங்கை வரை விஸ்வரித்துகொண்டனர். ஆரியர்கள் நம் இடத்தை ஆக்கிரமைப்பு செய்து நம்மை காட்டுக்குள் தள்ளிவிட்டனர். அதன் பின்பு அவர்களின் கலாச்சாரத்தையும், வழிபாட்டையும், பழக்கவழக்கங்களையும் நம்மிடம் கலக்க வைத்துவிட்டனர். நம் மொழி மூத்த மொழி, பழமைவாய்ந்த சிறப்புமிக்க மொழி, சிந்துசமவெளியில் உள்ள முத்திரைகள் நம் மொழியை சார்ந்தவையே [படம் இணைக்கப்பட்டுள்ளது]. நம் கலாச்சாரத்தில் சாதி வேறுபாடு கிடையாது அவை ஆரியர்களின் கலாச்சாரம் அதன் மூல்மாக நமக்கு புகுத்தப்பட்டுள்ளது. நாம் இயற்கையை வணங்குபவர்கள் சுமார் 200மில்லியன் முன்பு உருவான கண்டமான கோண்டுவானாவில் இருந்து தற்பொழுது அது பல கண்டங்களாக பரவி உள்ளன. நம் இனத்தவர்கள் சுமார் 750 குழுக்களாக உலகமெங்கும் பிரிந்து உள்ளனர். நாம் நாட்டார் வழிபாட்டை கொண்டவர்கள், அவர்களின் அடையாளங்களாக சொல்லப்படும் விலங்கினங்களை வழிபடுப்வர்கள் ஆனால் பின்னாளில் வந்த ஆரியர்கள் நம் கலாச்சாரம், வழிபாடுகளை மறக்கவைத்தும், அதை மாற்றியும் அவர்கள் க்லாச்சாரத்தை நம்மீது திணித்து இந்துக்கள் என அடையாளப்படுத்தி விட்டனர். இதை விட்டு நாம் நம் மரபை மீட்க வேண்டும் என உறுதி செய்வோம்"


நிற்க. தீவிரவாத கம்யூனிஸ்டுகளை பற்றி பேசப்படும் பதிவில் எங்கிருந்து தமிழ்நாட்டில் மேடைகளில் திருமுருகன் காந்தி, சீமான், கெளதமன், உதயகுமார் போன்றவர்கள் பேசியதை போடப்பட்டுள்ளதாக நீங்கள் சட்டேன நினைத்தால் அது தவறு. இது 1990 களில் கம்யூனிஸ்டுகள் மீண்டும் தலையெடுக்க ஆரம்பித்தபோது அங்குள்ள பழங்குடி மக்களை தங்கள் பக்கம் ஈர்க்கவும், ஆதரவு தெரிவிக்கவும் பேசியதே மேலே கூறப்பட்டது. இதை "கோண்டி(Ghondi) மொழி" பேசும் மக்களை இனரிதியாக பிரித்து தனிமைபடுத்த பேசப்பட்டதாகும் இதை "Gondwana Movement or Gondi Movment" என அழைக்கப்படுகிறது, இது 2000களில் கோண்டி மக்களிடையே மிகப்பெரிய தாக்கதை ஏற்படுத்தி ஊடுருவியுள்ளது. இன்று அதே வாக்கியங்களை பேசி தமிழ்நாட்டில் தற்பொழுதுள்ள கம்யூனிஸ்டுகள் 2010களிலிருந்து பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மக்களிடம் "குமரிக்கண்டம்", கோண்டி மக்களிடம் "கோண்டுவானா கண்டம்". இங்கே "காவேரி" அங்கே "கங்கை". இப்படி சிற்சில மாற்றங்களுடன் அதிவேகமாக பரப்பட்டுவருகிறது. ஆனால் 1990களில் இதை நம்பி இவர்களுடன் இணைந்ததினால் கோண்ட் மொழி பேசும் மக்கள் கொடுத்த விலை கொஞ்ச நஞ்சமல்ல, இருப்பினும் இன்றும் அது முடிவுக்கு வரவில்லை என்பது வரலாறு.


அயல்நாட்டு கம்யூனிஸ் கொள்கையே இங்கே உள்ள கம்யூனிஸ்டுகள் பின்பற்றி வந்துள்ளது. இறக்குமதி செய்யப்ப்பட்ட கம்யூனிச கொள்கை மற்ற நாடுகளில் முன்னேறியபோதும் இந்தியாவில் விரல் விட்டு எண்ணும் அளவுக்கே இருந்தார்கள். இரண்டாம் உலகப்போரின் போதும், விடுதலை போராட்டத்தின் போதும் இந்திய மக்களின் உந்து விசையாக இருந்தது பணபலம் கொண்ட சக்தி அல்லாமல் "தேசப்பற்று" ஒன்றுதான் மக்கள் ஆதரவை பெற்று தந்தது. இதை உணராத கம்யூனிஸ்டுகள் விடுதலை போராட்டத்தின் போது தனித்து விடப்பட்டனர். அதோடு 1962களில் நடந்த போரின் போது இந்தியாவில் வீசிய கம்யூனிஸத்து எதிரான அலை, நாட்டுப்பற்றுக்கு முன்னால் வேறேந்த பலமும் நிற்காது என்பதை கம்யூனிஸ்டுகளுக்கு படம் போட்டு காட்டின. இந்திய சமூகத்தினர் வன்முறை மேல் உள்ளவெறுபினால் எந்த ஒரு புரட்சியும் இந்தியாவில் ஆட்சியை பிடிக்க உதவாது என்பதை அறிந்து இருந்தது.


ஆரம்பகாலத்தில் ஆந்திராவில் CPI வர ஆரம்பித்திருந்தாலும், கேரளாவில் ஆட்சியை பிடித்திருந்தாலும் தமிழ்நாட்டில் கிளையை ஏற்படுத்தமுடியவில்லை. இருப்பினும் 1968 - 69 களில் அம்பத்தூர் மற்றும் கோவையில் நடந்த
இரகசிய சந்திப்புகளில் தமிழ்நாட்டில் மத்திய கமிட்டி அமைக்க ஒப்புதல் தரப்பட்டது. இருப்பினும் தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்து செயல்படவே ரொம்ப காலம் பிடித்தது. அதன் காரணங்களை பார்ப்போம்.


1. CPI(Marxist) கட்சிகளின் தளங்களான தஞ்சை, ஆற்காடு, தர்மபுரி, மதுரை திருநெல்வேலி மாவட்டங்களில் நக்ஸ்லைட் ஆரம்ப காலத்தில் இருந்தன. கிராமபுறத்தில் மட்டுமே எளிதாக ஆதரவு கிடைக்கும் என்பதினால் இம்மாவட்டங்களை தேர்ந்தேடுத்து கவனம் செலுத்தினர்.


2. தமிழ்நாட்டில் நக்ஸ்லைட் இயக்கத்தின் வடிவமைப்பு தெரியும் படி இருந்தது. இருப்பினும் கிராமப்புறங்களில் ஆயுதம் ஏந்திய போராட்டம் அந்நியமாக பட்டதால் இங்கே நக்ஸலைட் கொள்கைகளை பரப்ப முடியவில்லை.


3. அதோடு இங்கே யுள்ல CPI (Marxist) மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் நக்ஸலைட்டுகளை விரோத போக்காகவே அப்பொழுது பார்த்தன என்பது குறிப்பிடத்தக்கது.


4. திராவிட கட்சிகளின் முன்னேற்றத்தினால் கம்யூனிஸ்டுகளின் புரட்சி திட்டங்கள் எடுபடாமலே போனது. நடுவில் நக்ஸலைட் இயக்கம் தலைதூக்கியபோதும் திமுக ஆட்சியில் இருந்தது, "இங்கும் அங்குமாக ஒரிருவரை கொல்வதால் நக்ஸாலைட்டுகளால் எந்த நிஜப்புரட்சியையும் உருவாக்க முடியாது" என்றார் கலைஞர் கருணாநிதி.
[ இன்றைய தேதியில் தமிழ்நாட்டில் இருக்கும் தீவிர கம்யூனிஸ்டுவாதிகள் திமுக வை ஆதரிக்காமல் வெறும் திராவிடத்தை ஆதரிப்பதின் காரணமும் இதுவே. திராவிட கட்சிகள் கம்யூனிஸ்டுகளுக்கு முட்டுக்கட்டையாகவே இருப்பதினாலேயே].


5. அதிமுக ஆட்சி காலத்தில் எம். ஜி. ஆர், "வழி தவறிய சில இளைஞர்கள் சட்டத்தை கைகளில் எடுத்துகொண்டு சட்டவிரோத ந்டவ்டிக்கைகளில் ஈடுபடுவதை எந்த அரசாங்கமும் அனுமதிக்காது" என்றார். அதோடு இல்லாமல் வட ஆற்காடு மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் நகஸலைட் இயக்கத்த்னரை முழுவதுமாக அழித்தார்.


1969களில் கிளையில்லாத தமிழ்நாட்டில் அடுத்த 4 வருடங்களில் வேகமாக ஊடுருவியது இருப்பினும் தமிழக அரசியல் சூழ்நிலையில் அவர்களால் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை இவைகளை சட்ட ஒழுங்கு பிரச்சனை என்ற அளவிலேயே கையாள முடிந்தது. கொள்கை ரிதியாக மாற்றத்தை உருவாக்க முடியாத நகஸ்லைட் இயக்கம் தீவிரமாதம் ஒன்றை வைத்து பரப்ப முயற்சி செய்ய அது ஆளும் அரசங்களான திமுக, அதிமுக கோபத்தை சம்பாதித்தது. இறுதியில் "வன்முறையே" ஆயுதமாக கொண்டு அவர்களை அடக்கி வெளியேற்றியது இதில் இரு கட்சிகளும் ஒருங்கிணைந்து அவரவர்களின் ஆட்சியின் போது செயல்பட்டன. சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் திறமையாக செயல்பட்ட போலீஸ் கண்ட வெற்றி, சாதி பிரச்சனைகளில் கூட அடித்தட்டு மக்களிடம் எந்தவித ஆதரவையும் நக்ஸலைட்டுகளால் பெற முடியவில்லை. இதற்கு காரணம் தமிழ்நாட்டின் அரசியல் கட்டமைப்பே ஆகும்.


இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் நாட்டுப்பற்று உள்ளவரை எந்த ஒரு மாற்றுதலையும் கொண்டு வரமுடியாது என உறுதி செய்த கம்யூனிஸ்டுகளுக்கு மொழிவாத செயல் திட்டம் சற்று ஆதரவு பெற்று கொடுத்தது. 1995ல் நேபாளத்தில் இனவாத பேச்சு பெரும் ஆதரவை உருவாக்கி தருவதை கவனித்த இவ்வியக்கங்கள் மொழிவாதத்தோடு, இனவாதத்தையும் வைத்தன. கம்யூனிஸ்டு வரலாற்று ஆய்வாளர்கள் பலர் இன பிரச்சனையை கொண்டே வரலாற்றை அணுகினர். இவ்வகையான அணுகுமுறை "கோண்டி"மொழி பேசும் பழங்குடியினரிடையே பெரும் வரவேற்பு வர தங்கள் காலபடாத இடமான "தமிழகத்தில்" இவ்வணுகுமுறையை கொண்டு காலபதிக்க ஆரம்பித்தன. 2000 - 2008களுக்கு நடந்த RIM மற்றும் CCOMPOSA கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளில் இதை வெளிப்படையாக அறிக்கையின் மூலமாக சொல்லப்பட்டதை ஏற்கனவே பார்த்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக இலங்கையில் நடந்த ஈழப்பிரச்சனை தமிழகத்தில் காலூண்ற நல்லதொரு தருணமாக திகழ 2009லிருந்து பலதரப்பட்ட புதிய கம்யூனிஸ்டு இயக்கங்களும் ஈழப்பிரச்சனை மூலமாக "இன, மொழி மற்றும் கலாச்சார" வாதத்தை வைத்து தீவிர கம்யூனிஸ்டு கொள்கைகளான ஆயுத மேந்து புரட்சியை பரப்ப ஆரம்பித்து செயல்படுத்தப்பட்டுகொண்டுள்ளன. 2017 களில் இது தற்பொழுது நிலம், நீர், காடு பிரச்சனைகளையும் இந்த இயக்கங்கள் பேசுவதை கவனத்தில் கொள்ள வேண்டும். நக்ஸலைட்டுகளின் 3 கட்டபிரிவுகளில் முதல் கட்டபிரிவு தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ளதை அங்காங்கே நடக்கும் பொதுக்கூட்டங்களில் பேசப்படும் கருத்துக்களை கொண்டு புரிந்துகொள்ளமுடியும். ஏற்கனவே இதே மாதிரியான பேச்சுகளை நம்பி மாபெரும் விலையை கொடுத்த "கோண்டி" மொழி பேசும் மக்களின் வரலாற்றை கொண்டு இதை தமிழக மக்கள் கண்டுக்கொள்ளாமல் விடவேண்டும். இல்லாமல் இதே நிலை தொடர்ந்தால் "கோண்டி" மொழி பேசும் மக்கள் கொடுத்த விலையை "தமிழ்" பேசும் மக்களையும் அவ்விலையை கொடுக்க வைக்கவும் தீவிர இயக்கங்கள் தயங்காது என்பதை புரிந்துகொள்ளல் வேண்டும்.
[சமீப காலங்களில் நடக்கும் போராட்டங்களில் இவர்கள் கைவரிசை இருப்பதாக உளவு துறை ரிப்போர்டுகள் வருவதை கொண்டு இதை அவதானிக்கலாம்].


ஆதாரம்:
Political Tribal and Gondi Movment in India
Naxal Challenge
பொது அரசியல் வரலாறு.

No comments:

Post a Comment