Thursday, 26 July 2018

நக்ஸல் சவால் - 3


தீவிர கம்யூனிஸ்டு வாதிகளான மாவோயிஸ்டுகள், நக்ஸலைட்டுகள் சர்வதேச அமைப்புகளுடன் தொடர்புகொள்ள ஆரம்பித்ததே தங்கள் ஆயுத புரட்சியை அடுத்த கட்டத்திற்க்கு கொண்டு செல்லவே. 1970 - 80களில் எழுச்சியடைந்து பின்பு விழ்ச்சிய்டைந்த "தீவிர கம்யூனிஸ்ட்டுகள்" இயக்கங்கள் பல பிரிவுகளாக பிரிந்து கிடந்தன. பின்பு 1990களில் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்தன. இதில் 1996க்கு பின்பு உருவாக்கப்பட்ட பல புதிய இயக்கங்களும், கூட்டமைப்புகளும் "People War - "மக்கள் போர்"" எனப்படும் நேபாள மாவோயிஸ்டுகளின் CPN(M) அணுகுமுறையை கொண்டதாகவே இருந்தது. இந்த அணுகுமுறையின் வெற்றியால் புதிய அமைப்புகள் அனைத்துக்கும் நேபாளத்தையே தலைமையகமாக கொள்ள முடிவும் செய்யப்பட்டது.


People War - "மக்கள் போர்"
========================
1996ம் ஆண்டு நேபாள மாவோயிஸ்டு இயக்கம் CPN(M) "மக்கள் போர்" எனப்படும் அணுகுமுறையை
மன்னராட்சியை ஒழிக்க உருவாக்கியது. அடுத்த10 ஆண்டுகளில் நேபாளத்தி 90% பகுதியில் தன்னை விஸ்வரித்துள்ளது. இது மன்னராட்சிக்கு எதிரான போராட்டம் என்பதினால் மிக சுலபமாக விரிவாக்கம் செய்து கொண்டது. குறுகிய காலத்தில் நீட்டித்துகொண்ட இந்த அணுகுமுறையில் முக்கியமானவையாக கருத்தப்பட்டது "இனவாதம்" கருத்தியலே. இதை 2003ல் பல தரப்பட்ட இயக்க கூட்டமைப்பில் இனவாதம் பேசும்போது மக்கள் கூட்டம் கூட்டமாக எங்களை நம்பி சேர்ந்தனர் என்பதே. இதிலிருந்து இனவாத கருத்தியல் பொதுமக்கள் இடையே ஆதரவு கொடுக்கும் என்பதை புரிந்துகொண்டனர். 2008ல் நேபாளத்தில் மன்னராட்சியை ஒழித்தும் சாதித்தும் காட்டியது. இந்திய - சீன போருக்கு பின்பு அனைத்து இயக்கங்களும் உத்வேகம் கொடுத்த நேபாள மாவோயிஸ்டின் கருத்தை மறுவடிவாக்கம் செய்து அதை நிலம், நீர், காடு என்பதோடு இனம், மொழி மற்றும் கலச்சார வாதத்தோடு முன்னேடுத்தனர்.
[ தம்ழ்நாட்டில் 2008க்கு பிறகு இவ்வாறான கருத்தியல்கள் சூடுபிடித்ததை பலர் கண்கூடாக பார்த்திருப்போம் ஆனால் அதன் காரணம் இதுவாக கூட இருக்க்லாம் என்பது நம் யூகிக்க மட்டுமே முடிகிறது.]


சர்வதேச புரட்சி இயக்கங்கள்
==========================
உலகளவில் உள்ள மார்க்ஸிஸ் - லெனினிஸ்ட் கட்சிகள் 1984ம் ஆண்டு சர்வேதச புரட்சி இயக்கம் எனப்படும் RIM (Revolutionary Internationalist Movement) உருவாக்கப்பட்டது. இதில் 19 தீவிர கம்யூனிஸ்டு இயக்கங்களான மாவோயிஸ்டு குழுக்கள் இருந்தன.
2003ல் ஜூலையில் நடந்த கூட்டமைப்பு சந்திப்பின் போது நேபாள மாவோயிஸ்ட் போராளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. கருத்தரங்கள் முடிந்து வெளியிடப்பட்ட அறிவிப்பு செய்தி: "பூமியையே அதிரவைக்க வல்ல அளவு பங்களிப்பை "மக்க்ள் போர்" இயக்கம் செய்திருப்பதை CPN(M) முன்வைத்தது. இது நேபாள அரசுக்கு மட்டுமல்லாமல் இந்திய அரசுக்கும் நிச்சயம் அச்சுறுத்தலாக இருக்கும்" என அப்பொழுதே கூறப்பட்டது.


WPRM (Wordl People Residence Movement) என்பது இடதுசாரி இயக்கத்தால் தெற்காசிய பிராந்தியத்தில் உருவாக்கப்படுள்ள அமைப்பாகும். இதில் ஐரோப்பிய கிளைகளும் இருப்பதாக தகவல். இவர்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் பங்கேற்கமாட்டார்கள் மாறாக அதை ஆதரிப்பர் அதை பரப்பும் வேலைகளை அதன் அங்கத்தினர் செய்வார்கள். இது RIM அமைப்பினால் அங்கரிக்கப்பட்ட ஒரு அமைப்பு. இதன் உறுப்பினர்களாக இந்திய, நேபாள,பங்களா மற்றும் இலங்கை கம்யூனிஸ் சக்திகள் உள்ளன. இதன் முக்கியத்துவமாக அது செய்லபடும் விதம் பற்றி அதன் முக்கிய தலைவர் "பல வகைகளில் மக்களை குறி வைத்து இயங்கி கொண்டிருக்கும் வல்லரசு சக்திகளை ஒடுக்க பல இயக்கங்களாக நாங்க இருந்து உழைகிரோம். மற்ற நாடுகளின் பொருளாதாரம், அரசியல், கலாச்சாரத்தில் அமெரிக்கா நுழைந்துவிட்டது என்பதை முன்னிறுத்துவதும், ஏனைய நாட்டு அரச்சாங்களை ஜூனியர் பார்டனராக பிரகனப்படுத்துவதுமே நாங்கள் முன்னிறுத்துவது" என கூறினார்.


CCOMPOSA -
தீவிர கம்யூனிஸ்டு இயக்கங்களான மாவோயிஸ்டு, நக்ஸலைட்டு போன்றவகைகள் தங்கள் வலையமைப்பை விஸ்தரித்துகொள்ள அனைத்து தெற்காசிய அமைப்புகளும் ஒன்றும் சேர்த்து CCOMPOSA எனும் கட்டமைப்பை உருவாக்கியது. இதில் முக்கிய அங்கத்தினராக இருப்பவை இந்தியாவை சேர்ந்த CPI(Maoist) மற்றும் நேபாளத்தை சேர்ந்த CPN(M) ஆகும். இதுவே சமீப காலங்களில் முக்கியத்துவமான அறிக்கைகள் வெளியிடுகிறது. இதுவரை 5 சந்திப்புகள் நடத்தப்பட்டுள்ளன.


இக்கூட்டமைப்பு 2003ல் வைத்த தீர்மானம் "நாம் அனைவரும் இன்னும் நெருக்கம் கொள்வதாக உறுதி பூணுவோம். இதன் மூலம் மற்ற அமைப்புகளுடன் நல்ல பிணைப்பை உருவாக்குவோம். ஒற்றுமையாக நம் பொது எதிரியை எதிர்ப்போம். தெற்காசியாவையே உலகப்புரட்சிக்குள் புகுத்துவோம்". என சூளுரைக்கப்பட்டது.


2008ல் நடந்த மாநாட்டில் "இந்தியா தெற்காசியாவில் வளர்ந்து வரும் ஒரு சக்தியாக இருப்பதும், தெற்காசிய நாடுகள் இந்தியாவின் குடைக்கு கீழே வர விருப்படுவதும் விவாதிக்கப்பட்டது. இதனால் மாவோயிஸ்டுகளின் புரட்சியில் தடைகல்லாக இந்த்யா இருப்பதை உணர்ந்து அதை துரத்தி அடைக்கவேண்டும் என உறுதி மொழி எடுக்கப்பட்டது. தெற்காசியா முழுவதும் எழுப்பபடும் தீ ஜூவாலையில் இந்தியாவின் குடை எரிந்து சாம்பலாக்க தேவையான திட்டங்களை வகுக்க முடிவும் செய்யப்பட்டது".


இறுதியாக நடந்த 2011ல் நடந்த 5வது கூட்டமைப்பு மாநாட்டில் "ஏற்கனவே இந்தியாவின் தென்னாசிய பங்களிப்பை எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்பொழுது இந்தியாவுக்கு எதிராக ஒன்று சேர்ந்து செயல்பட்வேண்டும் எனவும், ஒட்டுமொத்த தென்னாசிய புரட்சிக்கு உகந்த தருணமான கருதப்படும் வேளையும் உலகளவிலான கடமைகள் இருந்தாலும் அதை ஒதுக்கிவிட்டு இதில் பங்குபெற்று புரட்சிக்கு வழிவகுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தருணத்தில் தென்னாசிய நாடுகளை சேர்ந்தவர்கள் அங்காங்கே தங்கள் அமைப்புகளை பலப்படுத்தவேண்டும் என்றும், அமைப்புகள் இல்லாத இடங்களில் புது தீவிர கம்யூனிஸ அமைப்புகள் உருவாக்க வேண்டும் என்றும் இதன் வெற்றியின் மூலம் தெற்காசியாவை மையமாக மையமாக வைத்து உலக அளவில் புரட்சி செய்து Proletarian Revolution க்கு வழிவகுப்போம்" என உரைக்கப்பட்டது.
[2011களில் தமிழ்நாட்டில் பலதரப்பட்ட கம்யூனிஸ்வாதிகள் இயக்கம் ஆரம்பித்தும், கட்சிகள் ஆரம்பித்தும் வெளிப்படையாக இனவாதம், மொழிவாதம் பேச ஆரம்பித்தனர் என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும்].


2004ல் "CPI-ML People's War" மற்றும் MCCI இணைந்தது CPI(Maoist) இயக்கம் உருவானதும் அது CCOMPOSA வின் முக்கிய அங்கத்தினர் என்பதையும் பார்த்தோம். CPI(Maoist) உருவாக்கத்தின் போது கொடுக்கப்பட்ட அறிக்கையை சுருக்கமாக பார்ப்போம்:
"ஒரே கொள்கையுடன் ஒடும் இரு பலம் பொருந்திய புரட்சி ஆறுகளை இணைப்பதே சிறந்தது என கருதி இனி ஒரே அமைப்பாக CPI(Maoist) என அறியப்படும். இதன் செயலாளராக "கணபதி" தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் சிதறிக்கிடக்கும் குழுக்களை ஒன்று சேர்க்க இந்த அமைப்பு உழைக்கும். ஒடுக்கப்பட்ட விவசாயிகளுக்கான ஆயுதந்தாங்கிய போர் முறையாக புரட்சி வெடிக்கும். ஆயுதந்தாங்கிய அணுகுமுறையே பிரதானப்போர் முடிவாக இருக்கும். இனி முக்கியப்பணி எங்களின் அறிவு, ஆயுதம் சார்ந்த போராளிகளை கொண்டு "புது ஜன்நாயக புரட்சி" எனும் அலையை நோக்கி கொண்டு செல்வதுதான். அரசாங்களின் ஒடுக்குமுறையை எதிர்த்து நிற்கும் எந்த மனிதரையும் இவ்வமைப்பும் இதன் கட்சியும் ஆதரிக்கும். இந்துத்துவ கொள்கையை எதிர்த்து அதை அடியோடு ஒழிப்பதும் அதற்கு எதிராகவு இக்கட்சி இயங்கும். மக்கள் போராட்டம் எதுவாக இருந்தாலும் அதற்கு ஆதரவாக இருக்கும். இதன் மூலம் புது ஜனநாயக சமுதாயத்தை உருவாக்கி அதன் வாயிலாக சோஷலிசம் மற்றும் கம்யூனிசம் நோக்கி முன்னேற வழிவகுத்து தரும் புரட்சி மாற்றமாக CPI(Maoist) அமைப்பு இருக்கும்".


ஆதாரம்:
CPI(Maoist) ஆரம்பித்ததை ஒட்டி வெளியிடப்பட்ட பத்திரிக்கை செய்தி.
Naxal Challenge
Press Release of CCOMPASA OF 3rd,4th,5th conference.

No comments:

Post a Comment