Thursday, 26 July 2018

நக்ஸல் சவால் - 2


2004 -05 காலக்கட்டங்களில் 15000 போராளிகளாக இருந்த நக்ஸல்கள் தற்பொழுது 2017ல் நக்ஸல் பாரி இயக்கம் ஆரம்பித்து 50வருடகாலம் கடந்த நிலையில் 40,000 மாக எண்ணிக்கையில் கூடியுள்ளதாக டெல்லி இராணுவ வியூகம் கணித்துள்ளது. இது எவ்வாறு சாத்தியமானது என்பதை தெரிந்து கொள்ள நக்ஸ்ல்களின் அணுகுமுறையை அறிந்துகொள்வதும் முக்கியமாக தமிழர்களுக்கு அவசியமாகிறது.


மாவோயிஸ்ட், நக்ஸலைட் என எப்படி குறிப்பிடபட்டாலும் ஆயூதமேந்தும் வழியையும், கொரில்லா தாக்குதல் முறையையும் இவர்களின் அடிப்படை. இதற்கான அஸ்திவாரம் 1949ல் நடந்த மாவோவின் ஆயுத புரட்சி வியூகமே. இதை சூருக்கமாக எழுத்தாளர் சமஸ் எழுதியதை கீழே கொடுக்கிறேன் "கிராமப்புற மக்களை ஒருங்கிணைத்தல், அவர்கள் உதவியுடன் அரசுக்கு எதிரான கெரில்ல போர் தாக்குதல்களை முன்னெடுத்தல், கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டுமொத்த கிராமப்புறத்தையும் கையகப் படுத்திய பின் நகரங்களைச் சூழ்ந்து கைப்பற்றுதல். அதாவது, விவசாயப் புரட்சியில் தொடங்கி உச்சபட்ச அதிகாரத்தைக் கைப்பற்றும் உத்தி இது. புரட்சியின் பாதை முழுக்க ரத்தம் உறைந்திருக்கும். அப்படிப் பல்லாயிரக் கணக்கானோரின் ரத்தத்தையும் உயிர்களையும் குழைத்துதான் இன்றையமக்கள் சீனம்உருவாக்கப்பட்டது என்பது வரலாறு."


1947ல் இந்திய சுதந்திரத்தை ஒருமனதாக ஏற்றாலும் மாவோ சீனாவை ஆயுதப்புரட்சி மூலமாக 1949 கைப்பற்றியது இங்குள்ள கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு ஏக்கத்தை உருவாக்கிவிட்டது என்பதே நிதர்சனம். இதன் பின்பு இவர்கள் இதன் தொடர்பானவிவாதம் மேற்கொண்டு கம்யூனிஸ்வாதிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது அதன் பின்பு நடந்த இந்திய - சீன போர் இவர்களுக்கு தைரியத்தை கொடுக்க இதை ஆதரிக்கும் நபர்கள் மூலமாக கம்யூனிஸிட் கட்சி உடைப்பட்டு அதிலிருந்து மார்க்ஸிஸ்ட் கட்சி உருவாக தங்களுக்கான தருணத்தை எதிர்ப்பார்த்து கொண்டிருந்தவர்களுக்கு வாய்த்ததுதான் நக்ஸ்ல்பாரி கிராமத்தில் நடந்த விவசாய கிளர்ச்சி. இதை குறைகேட்பாக முடிக்காமல் மாற்றாக அரசு அடக்குமுறை நடவடிக்கையை எடுத்ததினால் இது பெரும்பிரச்சனையாக நாடெங்கும் பரவியது.


மகேந்திர கர்மா (Mahendra Karma) ஆதிவாசி தலைவராக இருந்து 80களில் கம்யூனிஸிட் கட்சியில் சேர்ந்து பின்பு காங்கிரஸில் இணைந்து அமைச்சராக இருந்தவர். தீவிர இடதுசாரிகளான மாவோயிஸ்ட், நகஸ்ல்கலைட் எதிர்ப்பையே தன் குறிக்கோளாக கொண்டவர் 2013ல் ஒரு பேட்டியில் இவர்கள் அணுகுமுறையை இரண்டாக இருப்பதாக கூறுகிறார்.


1. ஆயுதம் ஏந்தும் சிந்தனையுடய ஆயுத ப்யிற்சி பெற்ற குழுவாக இருப்பதும்
2. பொது இடங்களில், கிராமங்களில் தங்கள் சித்தாந்தங்களை பயிற்றுவிக்கவும், பரப்பவதற்காகவும் உடைய "Intellectual" குழுவாக இருப்பதும்.


ஆனால் மாவோயிஸ்ட்கள் பொறுத்தவரை புரட்சிகர யுத்தம் 3 கட்டங்களாக உள்ளது.


1. அமைப்பு ரீதியான கட்டம்
இதில் பெண்கள், கூலியாட்கள், மாணவர்கள், ஏழை விவசாயிகள், ஜாதி எதிர்ப்பு சங்கங்கள் ஆகியவற்றி உள்ளடக்கி அமைப்பு உருவாக்குவது. இதில் தங்கள் ஜனநாயக எதிர்ப்பு கொள்கை பரப்ப அரசியல் கட்சிகளின் தவறுகள், சமுதாயத்தில் பழங்குடியினர் ஏமாற்றப்படுவது, அதிகார துஷ்பரயோகம், நிலச்சுவாந்தர்களின் நிலங்களை பகிர்வது போன்றவற்றை விவாதம் செய்து மக்கள் மனங்களை வென்று புரட்சி அடித்தளத்தை விஸ்தரிப்பது. இதில் வன்முறை இருக்காது இதில் வழிக்கு வந்துவிடுவார்கள் என தோன்றுபவர்கள் இயக்கத்தினால் இழுத்துகொள்ளப்படுவார்கள்


2. கொரில்லா போர் கட்டம்
செல்வாக்கு உடைய இடங்களை தங்கள் கட்டுபாட்டிற்க்குள் கொண்டு வரமுயற்சிப்பது. முழுவது கொரில்லா போராகும். போலிஸ் மேல் தாக்குதல், அதிகாரிகள் மிரட்டுவது, அரசியல்வாதிகள் மேல் தாக்குதல், வகுப்பாத பிரச்சனைக்கு ஆட்கள் குறிப்பெடுப்பது போன்றவை இந்த கட்டம் சேர்ந்தவர்கள் செய்வர். ஆயுதம், பயமுறுத்தல், மன அழுத்தம் ஆகியவற்றை அரசு இயந்திரம் சார்ந்தவர்களிடம் உண்டாக்குவது. இதனால் அரசு இதை கட்டுபடுத்த போலீஸ்டம் இப்பிரச்சனையை ஒப்படைக்கவைத்து அதில் நடைபெறும் பதிலடி நடைவடிக்கையில் பொதுமக்கள் பாதிக்கப்படும் அந்த தாக்கத்தை அரசு மீதும், போலீஸ் மீதும் விரோதமாக வளர்த்தெடுப்பது.


3. நடமாடும் யுத்த கட்டம்
மேற்கண்ட இரண்டு கட்டம் மூலமாக எந்த இடத்தில் மாவோயிஸ்டுகள் படிப்படியாக அரசுகளை திட்டங்களை முறியடித்து, தன் கட்டுபாட்டுகளில் முழுவதும் கொண்டுவந்ததாக் குறித்துவிடப்படுகிறதோ அங்கே இந்த கட்டம் ஆரம்பிக்கிறது. அங்கே "ஜன் தன் சர்க்கார்", "மக்கள் அரசு", "மக்கள் அதிகாரம்" என விவசாயத் துறை, வனத் துறை, வணிகத் துறை, பொருளாதாரத் துறை, சுகாதாரத் துறை, பொதுமக்கள் தொடர்புத் துறை, நீதித் துறை, பாதுகாப்புத் துறை, கல்வித் துறை என்று 9 பிரிவுகளைக் கொண்ட இந்த நிர்வாக முறையின் முதுகெலும்பு அதன் ராணுவப் படையணியானமக்கள் விடுதலை கெரில்ல படை அமைக்கும் கட்டம்.


இந்த கட்டங்களை எட்டுவதே மாவோயிஸ்ட், நக்ஸ்லைட்களின் குறிக்கோள். இதற்காக இவர்கள் மக்கள் ஆதரவை பெற ஒடுக்கப்பட்டவர்கள் என கூறி சமநிலைக்கு போராட அழைப்பது, இதற்காக வேண்டிய பணம் உதவி பெறுவது, எங்கேயெல்லாம் Corporate, multinationals கம்பெனிகள் வளங்களை சுரண்டுவதாக தோன்றுகிறதோ அங்கேயேல்லாம் போராடி முனைந்து மக்கள் மனதை வெல்வது. அதற்கு தகுதியான மாநிலங்களை மாவட்டங்களையும் இவர்கள் தேர்ந்தேடுப்பது முன்று காரணிகளான "ஜாமேன்,ஜல்,ஜங்கள்" அதாவது "நிலம், நீர், காடு என்பதை கொண்டுதான்


ஆதாரம்:
Maoist insurgency of India.
Naxalism and contemporary issues an analysis
Naxal challenge

No comments:

Post a Comment