Thursday, 26 July 2018

நக்ஸல் சவால் - 1


நக்ஸல் என்பது தீவிரமான இடதுசாரி கம்யூனிஸ் கொள்கை உடையது. ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் பார்டி 1960களி ல் பிளவுபட்டது. பிறகு வங்காளத்தில் உள்ள "நக்ஸல் பாரி" என்ற கிராமத்தில் கலகமொன்று வெடிக்க "தீவிர இடது சாரி கம்யூனிஸ்ம்" இதன் பின்பு "நக்ஸல் பாரி இயக்கம்", நக்ஸல் இயக்கம்" மற்றும் "நக்ஸ்லைட்" என அழைக்கபட்டது. இது நடந்தது சிறு கிராமம் தான் எனினும் கலகத்தை வழிநடத்தியது Charu Mazumdar, Kanu Sanyal and Jangal Santhal போன்றவர்களினாலேயே எனினும் இதை பூதாகரமாக்கி பிரபலமடைய செய்தது “a peal of spring thunder” and that “the Chinese people joyfully applaud this revolutionary storm of the Indian peasants”. என பாராட்டிய சீன நாளிதழான "The People’s Daily of China " வே ஆகும்.


எப்பொழுது இடதுசாரிகள் உலக அரங்கால் முக்கியமாக கவனிக்கபட்டார்களோ அப்பொழுதிலிருந்தே இவர்கள் "நாடாளுமன்ற ஜனநாயகத்தை" எதிர்ப்பதில் இறங்கினார்கள். "ஆயுதப் புரட்சியே சரி" என்றோரு வழிமுறையையும், "வன்முறையே கொள்கை" என்பதையே அஸ்திவாரமாகவும் வகுத்து விட்டார்கள்.


2004 - 2005 காலக்கட்டத்தில் ஆயுதேமேந்திய ஆண் மற்றும் பெண் போராளிகளாக 8000 பேர் இருக்கிறார்கள். இதோடு கிராம பட்டாளத்தான்கள் என 15000பேர் இருக்கின்றனர். இவர்கள் சராசரி வாழ்க்கை வாழக்கூடியவர்கள் தேவை எனில் உடனே களமிறக்கப்படுவர். உல்ஃபா போன்ற அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் நக்ஸைலைட்டுகள். அன்றைய கட்டத்தில் நக்ஸ்லைட் இயக்கத்தில் இருப்ப்வர்களுக்கு மாதம் 1500ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகிறது. தங்கள் இயக்கத்தை வெற்றிகரமாக் நடத்த CRZ ( Compact Revolutionary Zone) எனப்படும் வடிவமைப்பை வகுத்துள்ளனர் அது நேபாளத்தில் துவங்கி ஆந்திரபிரதேசம் வழியாக போகிறது. 2004ல் இது 75% வடிவமைப்பை முடித்துவிட்டனர். அதாவது நடுநிலை பார்வையாளர்களையும் அவர்களே அறியாமல் நக்ஸ்லைட்டின் ஆதிக்கம் ஏற்படுத்தவேண்டும் என்பதே இந்த வடிவமைப்பு. (இன்றைய தேதியில் இது தமிழகமும் சேர்ந்திருக்கவேண்டும் என்பது நம் அவதானிப்பு).


ஒன்றுமில்லாத சாம்பலில் இருந்தே உருவாகும் ஃபினிக்ஸ் போல எப்படியும் ஒழித்து கட்ட முடிவெடுத்து முயற்சி செய்தாலும் இதை ஒழிக்கமுடியாது என்பதே நிதர்சன உண்மை. இது வெல்லக்கூடியது மட்டுமே முடியும். கூட. இந்த இயக்கங்கள் பலவாக பிரிந்தாலும் உறுப்பினர் சிதறாமல் அதே பலத்தை உருவாக்கும் வல்லமையும் கொண்டது. பிரிந்த இயக்கங்கள் ஒன்று சேர ஆரம்பித்தது. Communist Party of India-Marxist-Leninist Party Unity மற்றும் PWG 1998ல் ஒன்று சேர்ந்தது என இரு செக்ரட்ரிகளான கணபதி மற்றும் ப்ரசாத் 1998ல் அறிக்கை வெளியிட்டனர். இதன் மூலம் இனி "CPI-ML People's War" என அழைக்கபெறும் என கூறிப்பட்டது. இது ஒருபக்கம் இருக்க இன்னொருபக்கம், 2003ல் RCCI(Maoist) மற்றும் MCC யுடன் இணைந்து புதிய MCCI என உருவாகி, பின்பு 2004ல் "CPI-ML People's War" மற்றும் MCCI இணைந்தது CPI(Maoist) என அழைக்கப்படுகிறது . கொரில்லா தாக்குதல் நடத்து இருபெரும் பிரிவுகள் இவை என்பது குறிப்பிடித்தக்கது.
இதை கடந்து இத்தாலி, டச்சு, அமெரிக்கா, துனிஸியா மற்றும் கொலம்பியாவுடன் சர்வதேச தொடர்புகளும் உள்ளன, இவர்களுக்கான தொடர்பு, கட்டமைப்பு உருவாக்க ஒருங்கிணைப்பு கமிட்டியான "CCOMPOSA" வினால் உருவாக்கி தரப்படுகிறது. இன்றைய நிலைமை நக்ஸ்லைட்டுகளுக்கு சாதகமாகவே உள்ளது என்பது வருத்தப்படக்கூடியதே ஆகும்.


ஆதாரம்:
https://www.rediff.com/news/1998/oct/05nxl.htm
http://www.massline.info/India/Indian_Groups.htm
Naxal Challenge

No comments:

Post a Comment