Thursday, 26 July 2018

நக்ஸல் சவால் - 5


கம்யூனிஸ்டு தீவிரவாத இயக்கங்களான நக்ஸலிஸம், மாவோயிஸ்ம் கவனம் பதிக்க வேண்டிய ஒரு பிரச்சனை. எங்கே எல்லாம் அரசாங்க நடவடிக்கைகள் போதுமானதாக இல்லையோ அங்கே உள்ள வெற்றிடத்தை உள்புகுந்து இந்த இயக்கங்கள் நிரப்பிவிடும். சமூக நீதி, வேலைவாய்ப்பின்மை, நிலச்சுரண்டல் போன்ற பொது பிரச்சனைகளை தீர்ப்பதாக மார்தட்டிக்கொண்டு கிராமப்புறங்களில் வளர்ந்து விடுகின்றன.


இந்திய இடதுசாரி தீவிரவாதிகள் 1967களில் கம்பு, கழி, கூரிய ஆயுதங்களும் அதிகபட்சமாக ஓரிரு துப்பாக்கிகளையும் மட்டுமே பயன்படுத்தினர். ஆனால் இன்றோ ஏகே 47 ரக துப்பாக்கிகளோடு பரிச்சியம் உள்ளது, கண்ணி வெடி, ரிமோட் குண்டுகள் போன்றவற்றுகளிலும் பயிற்சி பெற்றுள்ளனர். இதற்கான ஆயுதங்களும், வெடிப்பொருட்களும் எல்லை பகுதிகளில் சுலபமாக கிட்டுவதே காரணம். இதோடு ஆயுத கடத்தல் கும்பல்கள், சர்வதேச தீவிரவாத மற்றும் பிரிவினைவாத கூட்டங்களுடனான நட்பும் கவனிக்கபடவேண்டிய ஒன்று. இவை பிரயாணம் செய்ய சல்லடை ஒட்டை போல இந்திய - நேபாள எல்லை பகுதி அற்புதமாக ஒத்துழைக்கிறது. சர்வதேச தீவிரவாத அமைப்புகள் மூலமாக சாதித்தவைகள் கொடுக்கப்பட்டுள்ளது,.


1. நேபாளத்தில் அதிக அளவில் பரவி இருக்கும் பாகிஸ்தான் உளவுத்துறையான ISI அருகிலுள்ள பங்களாதேஷ் மூலமா ஆயுதம் சப்ளை செய்ய முடியும் என்பதினால் இந்த எல்லை பகுதியில் குறிவைத்து காத்து கிடக்கின்றன.


2. 2000 ம் ஆண்டில் PWG யின் மூத்த தலைவர் ISI அதிகாரிகளை சந்திக்க கராச்சி சென்றதாக தகவல் கிடைத்துள்ளன. ஆனால் இதை மாவோயிஸ்ட் தலைவர் மறுத்துள்ளார் ஆனால் 2005ல் ஒரு மிடியாவில் பாகிஸ்தானின் நவீன ஆயுதங்களை கொண்டுள்ளதை காணும்போது கணபதி சொல்வதை நம்புவது கடினமாக உள்ளது.


3. 2004களில் எல்லையின் வழியாக போலி கரென்சிகளும், போதை பொருட்களும் நேபாள மாவோயிஸ்டுகளின் உதவியுடன் கடத்திபட்டகொண்டு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. கிழக்கு உத்தரபரதேசத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள் நேபாள மாவோயிஸ்டு தீவிரவாதிகளுக்கானது


4. முன்னாள் PWG பங்களாதேஷ் ஏஜேன்டுகள் மூலமாக ஆயுதங்களை கொள்முதல் செய்யப்பட்டுள்ளன். அதோடு ஆயுத பரிமாற்றதிற்க்கு உல்ஃபா தீவிரவாதிகளுடனும் தொடர்பு வைத்துள்ளனர் இதற்காக 10மில்லியன் 2000களில் தந்திருக்கிறது. சொல்லப்போனால் 1998களில் லஷ்கர் தொய்பாவுடனும் தொடர்பு வலுத்திருந்தாக ரிப்போர்டுகள் இருக்கின்றன.


5. இலங்கையில் உள்ள LTTE அமைப்பு PWG க்கு 1991ல் 60 ஏகே 47. 20 நவின துப்பாக்கிகளையும் வழ்ங்கியுள்ளது. கண்ணி வெடி, ஆயுத தயாரிப்பு போன்ற தொழிநுட்பங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளது. [ இதை நம்ப முடியவில்லை என நினைப்பவர்கள் தெரிந்துகொள்ளவேண்டியது, இதை கூறியது மாவோயிஸ்ட் தல்வைரான லட்சுமணராவ் () கணபதி. முன்னாள் LTTE மெம்பர்கள் இந்தியாவில் ஒரு கம்யூனிஸ்டு இயக்கம் ஆரம்பித்துள்ளதாகவும் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டதாகவும் ஒரு நேர்காணலில் அவரே கூறியது ] அதோடு ஆயுத பயிற்சி செய்யும் விடியோக்களும் சிக்கியுள்ளதாக தெரிகிறது. 2002லும் ஆயுத பேரம் இவ்விரு அமைப்புகளிடையே நடந்துள்ளன.


இவ்வாறு தொலைதொடர்புகள் பெரிதாக வளராத காலங்களிலேயே சர்வதேச அளவில் தொடர்பு கொண்ட ஒரு குழுவாக தீவிர கம்யூனிஸ்டு இயக்கங்கள் இருந்து வருகிறது. இந்தியாவில் இவர்கள் செய்த கொலை, கொள்ளை, நாசவேலை, அச்சுறுத்தல் போன்றவைகள் எண்ணிலடங்கா. இவர்களின் போக்குகளினால் இந்தியாவில் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என அது தொடர்பான ஒரு கட்டுரை Australia Defence Collegeல் 2011ல் நடந்த Conferenceல் "நக்ஸ்லிஸத்தினால் இழுத்தடிக்கப்படும் இந்தியாவின் வல்லரசு கனவு" என்ற பெயரில் report சமர்க்கப்பட்டுள்ளது. அதை சுருக்கமாக பார்ப்போம்.


1. இந்தியாவில் 640 நகரங்களில் 195 நகரங்களிலும், 28 மாநிலங்களில் 16 மாநிலங்களிலும் நக்ஸ்லைட் இயக்கம் பரவியுள்ளது.


2. மாவோயிஸ்ட் சம்பந்தமான குற்றப்பின்னனி கொண்ட சம்பவங்கள் 2001 - 500லிருந்து 2010ல் - 1180 அதிகரித்துள்ளது.


3. மாவோயிஸ்டு ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களில் "கங்காரு" கோர்ட் எனப்படும் "ஜன் அத்லத்" நீதிமன்றங்கள் அமைக்கப்படுள்ளன.


4. Special Economic zones (SEZ) என வளர்ச்சியை உருவாக்க தேர்ந்தேடுக்கப்படுள்ள இடங்களே இவர்கள் குறி வைப்பது. அவ்வளர்ச்சி திட்டங்களினால் இடமாற்றப்படும் மக்களை குறிவைத்து புரட்சி, போராட்டம் என செயல்படுத்துகின்றது. CPI (Moist) உயர் தலைவரான "கணபதி" இந்த SEZ களை "நவீன காலனியாதிக்கம்" என்ற கோட்பாட்டிள் வைத்து மக்களை அணுகுகின்றனர்.


5. இந்தியா முழுவதுமான கனிம வளம் கொண்ட இடங்களை தேர்வு செய்து அதை மாவோயிஸ்டுகளும், நக்ஸலைட்டுகளும் ஆக்கிரமிப்பு செய்துள்ளது இவ்வளங்களே இவ்வியக்கங்களுக்கான வருமானத்துக்கான ஆதாரங்களாக அமைக்கின்றது.
[ வருடம் 450கோடி வரை இவ்வமைக்குளின் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் வசூலிக்கப்படுகிறது. 2016ல் இதனுடைய இருப்பு 2000கோடிக்கும் குறையாமல் பதுக்கப்பட்டிருப்பதாக ஆதாரங்கள் உள்ளன.]


6. ஆக்கிரமிப்பு பகுதிகளில் வரும் Infrastructure Project களை குறி வைத்து "வரி" இவர்களால் விதிக்கப்படுகிறது கட்டாத நிறுவனங்களில் அவ்விடத்தை துவம்சம் செய்கின்றனர்.


7. Economic Warfare போரினை நக்ஸ்லைட்டுகள் தொடுத்துள்ளன. அதாவது வளர்ச்சிக்காக போட்டப்படும் சாலைகள், ரயில்வே தண்டவாளங்கள், மின்சார வளாகங்கள், தொலைதொடர்பு டவர் மற்றும் சாதனங்கள் என அனைத்தையும் எதிர்ப்பதை ஒரு குறிக்கோளாக செய்து இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.


8. 2005 - 2010க்குள் நக்ஸ்லைட் இயக்கங்களினால் இதுவரை மக்கள் + பாதுகாப்பு படையினர் 3500 பேர் இறந்துள்ளனர், மாவோயிஸ்டுகள் சேர்த்து 5000பேர் இறந்துள்ளனர். [கடந்த 4 ஆண்டுகளில் குறைந்திருந்தாலும் முற்றிலும் தவிர்க்கபடவில்லை. 2018ன் படி மொத்தமாக 7923 ஆக உயர்ந்துள்ளது]


9. கிராமப்புறங்களை தாண்டி, "urban" மக்களை மதை மாற்றவும் அதற்கான செயல்திட்டங்களும் "Urban Perspective" எனும் திட்டவரைவில் கொடுத்துள்ளனர்.
[இதன்படி செயல்படுத்துவதே "Urban Naxalism" என கூறப்படுகிறது] இதில் வெற்றிபெற்றால் இந்திய ஜனநாயக அரசுக்கே மிகப்பெரிய சரிவு ஏற்படும் என நம்பப்படுகிறது.


10. 40000 Active நபர்களையும், 100,000 inactive அங்கத்தினரையும் வைத்துள்ள இவ்வியக்கங்கள் இந்திய பொருளாதாரத்த சீர்குலைக்கவும் இயங்குவதால் எதிர்காலத்தில் உலக அரங்கில் இந்தியா மேல் உள்ள நம்பிக்கை இழக்க நேரிடும் என்பது தெளிவாகிறது. நகஸல் இயக்கங்கள் இந்தியாவின் வளர்ச்சியை சீர்குலைக்கிறது என்பதனை இந்த கட்டுரையில் முடிவுரையாக சொல்ல்ப்ப்டுகிறது.


மேலே குறிப்பிட்டுள்ள சூருக்கமான 10 பாயின்டுகளும் அந்த கட்டுரையில் வந்தவை இவை 2011ல் வந்த கட்டுரை. இன்றைய தேதியில் இது அதிகரித்திருக்கூடும் என்பதே உண்மை. தமிழ்நாட்டில் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு நடக்கும் வளர்ச்சி திட்டங்களுக்கான போராட்டங்கள் ஒர் உதாரணம். இதை ஒடுக்க பலதரப்பட்ட முயற்சிகளை இந்திய அரசு முயற்சி செய்கின்றது என பரவலாக அறியப்படுகிறது. தற்பொழுது கடந்த 2 ஆண்டுகளில் குறைந்துள்ள நக்ஸலைட் நடவடிக்கைகளும், இந்திய பிரதமரை கொல்ல சதி செய்யும் மாவோயிஸ்டுகள் சதி எனப்படும் செய்திகளை நோக்குவோமேயானால் இந்திய அரசு சரியான பாதையில் இத்தீவிரவாத இயக்கங்களை ஒடுக்க பயணிக்கிறது என்பதே ஊர்ஜிதமாகிறது.


ஆதாரம்:


The Maoists Finances
Naxalism - Australian defence College. 2011
Naxal Challenge